Homeசெய்திகள்

ஜே.வி.பி பொதுச்செயலாளர் டில்வின் சில்வா – குஜராத் முதலமைச்சர் இடையில் சந்திப்பு!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேல் ஆகியோருக்கு

தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழப்பு
எம்பிக்களே விடுதலைக்கு தடையாம்!
செம்மணி மீள ஆரம்பம்!
எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்… பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி
இந்தியாவுடன் விளையாடுவதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு


மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேல் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு திங்கட்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.
இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பேரில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியாவுக்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  இந்த சந்திப்பின் போது குஜராத் மாநிலத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இலங்கையின் கைத்தொழில், சுற்றுலா மற்றும் ஆடை உற்பத்தித் துறைகளின் மேம்பாட்டிற்காக இணைந்து செயற்படுவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
குஜராத் மாநிலத்தின் தலையீட்டில் புத்தரின் புனித சின்னங்கள் மக்கள் தரிசனத்திற்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்கும், ‘டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்பிற்கும் டில்வின் சில்வா தனது நன்றிகளைத் தெரிவித்தார்.