Homeசெய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் வசதிகளை விரிவுபடுத்த தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கும் அவர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பல்கலைக்கழக

386 அலங்கார செடிகளை கடத்த முயன்றதாக 19 வயது இளைஞர் விமான நிலையத்தில் கைது
மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம்
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கே முன்னுரிமை அளியுங்கள்
ஜே.வி.பியின் முன்னாள் பா. உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்
குழந்தைகளில் பால் மா வகைகளில் நச்சுத்தன்மை கண்டறியப்பட்டது


நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கும் அவர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தற்போது ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரமே விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
எனினும், எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இசை போன்ற பாடநெறிகளிலும் இம்மாணவர்களை இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்தார். இதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, பல்கலைக்கழக விடுதி வசதிகளை மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களின் தங்குமிட உட்கட்டமைப்பு வசதிகள் நவீனமயப்படுத்தப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.