Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images/AFP PHOTO/INDIAN SPACE RESEARCH ORGANISATION (ISRO)”
படக்குறிப்பு, பி.எஸ்.எல்.வி சி 61 ராக்கெட் தோல்வியில் முடிந்தது. 18 மே 2025, 02:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
இன்றைய தினத்தில் (18/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையாதங்களில் வந்துள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்திய பி.எஸ்.எல்.வி சி 61 ராக்கெட் தோல்வியில் முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை தாங்கிச் சென்றது.
விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்து சென்ற பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் 2 அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்த நிலையில் மூன்றாவது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது இதனால், திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி முழுமையாக ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்ல
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
படக்குறிப்பு, சென்னை, அடையாறு, கார் விபத்துசென்னையில் தரமணி அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் ராஜிவ் காந்தி சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சென்னையில் ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பார்க் அருகே நேற்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் பயணித்த ஓட்டுநர் மரியதாஸ் மற்றும் நான்கு பயணிகள் உள்ளிட்ட ஐந்து பேரும் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கார் போக்குவரத்து சிக்னலில் காத்துக் கொண்டிருந்தபோது சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விழுந்துள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மெட்ரோ கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் தான் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் நேற்று இரவு சாலையை சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கும், மெட்ரோ பணிகளுக்கும் எந்தக் காரணமும் இல்லை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் விபத்துக்குப் பிறகு காரின் உரிமையாளர் பேசிய உருக்கமான காணொளி இணையத்தில் வைரலானது.
நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடைமின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மே 4 ஆம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியும் ஒரு மையமாக இருந்தது. இந்த நிலையில் தேர்வு நாளன்று கனமழை ஏற்பட்ட மின் தடையால் தேர்வு பாதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 1:15 மணி நேரம் மின் தடை ஏற்பட்ட நிலையில் தங்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படவில்லை, இதனால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் எந்த மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை, தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்பு பறிபோய் உள்ளது எனத் தெரிவித்திருந்ததாக அந்த செய்திக் குறிப்பில் உள்ளது.
இந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசு கால அவகாசம் கோரி இருந்த நிலையில் அது வரை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாகவும் இந்து தமிழ் திசையின் செய்தி கூறுகிறது.
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியவர் கைது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போதைப் பொருள் (Representation Image)நாகையில் இருந்து இலங்கைக்குச் சென்ற கப்பலில் போதைப் பொருள் கடத்தியவர் கைது செய்யப்பட்டதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த கப்பலில் பயணித்த ஒருவர் போதைப் பொருள் கடத்திச் சென்றதாக இலங்கை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார் என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காங்கேசன் துறைக்கு புறப்பட்ட கப்பலில் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு 85 பயணிகள் பயணம் செய்தனர். இலங்கை காங்கேசன்துறை சென்றடைந்ததும், கப்பலில் வந்த பயணிகளை இலங்கை அதிகாரிகள் விசா நடைமுறைகளுக்காக சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரிடம் 4.12 கிலோ போதைப் பொருளை இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்ததாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்தனர் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இலங்கையில் துப்பாக்கிச் சூடு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது வெள்ளியன்று துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்துவிட்டு அவருக்குச் சொந்தமான ஆவணங்களின் கோப்புகளை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தை பகுதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை துஷித ஹல்லொலுவ வெளியிட்டதுடன், தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு