Homeசெய்திகள்

யாழில். ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு – சிறுவன் உயிரிழப்பு ; இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதிய

மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு ரூ.9.2 லட்சம் அபராதம் – நடந்தது என்ன?
இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி
யாழ். ஊர்காவற்துறையில் காவல்துறையினரால் 17 வயதுப் சிறுவன் சுட்டுப் படுகொலை
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு: மார்ச் 16 தீர்ப்பு
அல்லைப்பிட்டி : வெள்ளையடிக்கும் அனுர அரசு!


யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்தியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை அவ்வீதியூடாக சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றினை வழிமறித்துள்ளனர். குறித்த வாகனம் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த போது , வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதனை அடுத்து வாகனம் நிறுத்தப்பட்ட போது , வாகனத்தினுள் இருந்த சிறுவன் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளான். அவனை உடனடியாக மீட்டு , பொலிஸார் யாழ் . போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்த போதிலும் , சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். அதேவேளை வாகனத்தினுள் இருந்த மேலும் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவர்கள் என்ன நோக்கத்திற்காக அதிகாலை வேளை ஊர்காவற்துறை நோக்கி பயணித்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு குற்ற பின்னணிகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.