Homeசெய்திகள்

ஜே.வி.பியின் முன்னாள் பா. உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் கட்சியின் நிதிக்காகப் பெற்ற மில்லியன்கணக்கான ரூபா சம்பளத்தைக் கோரி, ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்

சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்! பனங்காட்டான்
ஜப்பான் தேர்தல்: தகைச்சி பெரும்பாண்மை பெறுவார்: கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!
யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது
கொஸ்கம விபத்தில் பலர் காயம்
தென் கொரிய இராணுவ உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானது.


பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காலத்தில் கட்சியின் நிதிக்காகப் பெற்ற மில்லியன்கணக்கான ரூபா சம்பளத்தைக் கோரி, ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு ஒன்று அவர்களின் சட்ட முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாண சபை உறுப்பினர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்த காலத்தில், உறுப்பினர்களின் அனைத்து சம்பளங்களும் ஜே.வி.பியின் கட்சி நிதிக்காகப் பெறப்பட்டதாகவும், அத்தகைய கொடுப்பனவுகளை எடுப்பது சட்டவிரோதமானது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் செயலாளரும் ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரேமசிறி மானகே, “கட்சி நிதிக்காக எடுக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற தொடர்ந்து போராடுவோம்’ என்று கூறினார்.
தனது சம்பளப் பணத்தில் மில்லியன் கணக்கான ரூபா சட்டவிரோதமாகக் கட்சி நிதிக்காகப் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், தனது சம்பளப் பணத்தை கட்சி நிதிக்காகப் பெற்று, தனது ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது மிகவும் நியாயமற்றது என்று சுட்டிக்காட்டினார்