Homeசெய்திகள்

மட்டக்களப்பில் பட்டி பட்டியாக உள்நுழைந்த யானைகள்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்கு

யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
நிபா வைரஸ் தொற்றால் பங்களாதேஷில் ஒருவர் உயிரிழப்பு!
இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!
பல ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கியில் வைப்புச் செய்திருந்த நபர் கைது
எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்… பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பாட்யடியாக நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி வருகின்றன. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது.நூற்றுக்கணக்கான யானைகள் இவ்வாறு ஊருக்குள் வருவதை கிராம வாசிகள் அவதானித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள்; தினமும் அச்சுத்துடனே வாழ்வதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.மிக நீண்ட்ட காலமாகவிருந்து அப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினரும் பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை துரத்தும் பணியினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.