Homeசெய்திகள்

திருகோணமலையில் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து

வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
கனடாவுக்கு செல்லும் மாணவர்கள் விசாவில் அதிரடி மாற்றம்! இனி புதிய நடைமுறைகள்
தொப்பிகல காட்டில் இருந்து மீட்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்!! தாக்குதலுக்காக மறைத்து வைக்கப்பட்டதா?
மாட்டு இறைச்சிக்கு மன்னாரில் நிர்ணய விலை
இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!


திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கடக்கிழமை (9) உத்தரவிட்டுள்ளது.திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.குறித்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழு இன்று நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜா ஆலயத்தின் பீடாதிபதி திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஸ்ஸப தேரர்,  திருகோணமலை சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும்  நந்த தேரர் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.