மாணவர்கள் , இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது !

Homeசெய்திகள்Design

மாணவர்கள் , இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது !

யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் ,பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தனது வீட்டில் வைத்தும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் , அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதாகவும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்
ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியால் இளைஞர்களுக்கு அநீதி – சஜித் பிரேமதாச !
கல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுக்கின்றன – சஜித் பிரேமதாச !
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலய நிதியுதவியில் காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக் கட்டடம்
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடலை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்

யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஒருவர் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாக, பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் நடமாட்டம் தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த எடுத்து சென்ற நிலையில் ,பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தனது வீட்டில் வைத்தும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும் , அதற்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதாகவும் தமது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.