பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை

Homeசெய்திகள்

பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங

இரு குடும்பங்களுக்கு இடையில் தகராறு ; கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் கொடூரமாக கொலை!
Ilakku Weekly ePaper 377 | இலக்கு-இதழ்-377 | சனி, பெப்ரவரி-07-2026
யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
மூதூரில் பாவனைக்கு உதவாத 1500 கிலோ அழுகிய மீன்கள் மீட்பு!
மஞ்சள் சீருடை போராட்டம்: பிரெஞ்சு கலகத் தடுப்புப் பிரிவு காவல்துறை மீது வழக்கு!


போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை எந்தவொரு வகையிலும் பணியமர்த்த வேண்டாம் என்று அமைச்சர் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
போதைப் பொருள் பாவனையின் கீழ் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் மத்தியில் தற்போது சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளுக்கு கூடுதலாக உமிழ்நீர் மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, போதைப் பொருள் பாவகையில் வாகனம் ஓட்டு சாரதிகளை அடையாளம் காணும் திட்டத்தை வலுப்படுத்த, கூடுதலாக இரண்டு நடமாடும் ஆய்வகங்களை இணைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

COMMENTS