அரசியலமைப்பு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!

Homeசெய்திகள்

அரசியலமைப்பு விடயத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ள நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒர

இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!
அமெரிக்கா, இந்தியா இடைக்கால வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை வெளியிட்டன
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ராஜபக்ஷர்கள்! -பிமல் ரத்நாயக்க
எப்ஸ்டீன் தொடர்பு அம்பலம்… பதவி விலகிய மூத்த பிரெஞ்சு அரசியல்வாதி
பொலிஸாருக்கு இடையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் மற்றையவர் சிறையில்


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட உள்ள நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை அலுவலகத்தில்   இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். “1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு யாழ்ப்பாணம் வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது”.
1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர எடுத்த முயற்சியை தொடர்ந்து தமிழ்மக்களிடம் ஒற்றுமை வர வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஒற்றுமை மாநாடு வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது இலங்கை அரசாங்கத்தை நோக்கி ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வைப்பதென்றும் அப்போதைய நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக இயங்குவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டு இது தமிழர்களினுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என அறிவிக்கப்பட்டது என்று எம்.கே.சிவாஜிலிக்கம் தெரிவித்துள்ளார்.
“தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஒரு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுகின்ற நிலையில் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு கட்சிகளிடையே ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை வைப்போமாக இருந்தால் அது மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கும்” என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

COMMENTS