Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரான அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக கேட்டறிந்ததோடு, வடக்கின் பொருளாதார நிலை மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இதுகுறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ்தளத்தில் நேற்று நான் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனைச் சந்தித்தேன். வடக்கின் அரசியல் முன்னேற்றங்கள், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த விவாதத்திற்காக. நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன் என்று பதிவிட்டார்.