யாழ். பல்கலையில் இளங்கலைமாணி ஆய்வு மாநாடு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகிய இந்த ஆய்வு மாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து கொண்டார். கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் ஆரம்பித்த ஆய்வு மாநாட்டில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் திறப்புரையினை மேற்கொண்டார். கலைப்பீடத்தின் இளம் கலைமாணி ஆய்வு மாநாடு கடந்த நான்கு வருடங்களாக மிகச் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இம்முறை நடைபெற்ற ஐந்தாவது மாநாடு “வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்” என்னும் தொனிப்பொருளோடு 16 ஆய்வுத் தடங்களில் நடைபெற்றது. இளங்கலைமாணி பட்டக்கற்கையின் இறுதியாண்டில் மாணவர்கள் நிறைவுறுத்திய ஆய்வுகளின் அளிக்கையாக இம்மாநாடு அமைந்தது. அவை ஆய்வுச் சுருக்கங்களாக இந்த ஆய்வு மாநாட்டின் ஆய்வடங்கல் மூலமும் வெளியிடப்பட்டன

Related Posts