தனது வீட்டுக்கு முன்பாக மின் விளக்கினை பொருத்துமாறு கூறி , யாழ் . மாநகர சபையின் மின்சார ஊழியரை நபர் ஒருவர் தாக்கியதில் ஊழியர் காயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியில் மாநகர சபையின் மின்சார ஊழியர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை வீதி மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் தனது வீட்டின் முன்பாகவும் மின் விளக்கினை பொருந்துமாறு கூறியுள்ளார். மாநகர சபையின் அனுமதியுடனையே மின் விளக்கினை பொருத்த முடியும், நாம் நினைத்தவாறு மின் விளக்கினை பொருத்த முடியாது என ஊழியர்கள் கூறிய போது , அவர்களுடன் முரண்பட்ட வீட்டின் உரிமையாளர் , அவர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்த ஊழியர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ் . மாநகர சபை மின் ஊழியர் மீது தாக்குதல் – Global Tamil News
63
previous post