புலம்பெயர் தமிழ் மக்களது காணிகளை மோசடியாக உரிமை மாற்றுவதான குற்றச்சாட்டின் மத்தியில் யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணியொருவர் கைதாகியுள்ளார்.இன்னொரு சட்டத்தரணி கைது அச்சத்தில் தலைமறைவாகியுள்ளார்.இதனிடையே கைதான சட்டத்தரணியை சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று, அவரிற்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்துள்ளது.யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் காணி ஒன்றின் உறுதி எழுதியதில் மோசடி இடம்பெற்றமை தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் சட்டத்தரணி இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை விசாரணைகளின் பின்னர், காவல்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் முன்னிலையில் முற்படுத்திய வேளை, கைதான சட்டத்தரணியை பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வெளிநாட்டு பயண தடையை விதித்துள்ளது.அதேவேளை, கைதான சட்டத்தரணியின் வீட்டிற்கு நேற்றையதினம் ஞாயிற்றுகிழமை காவல்துறையினர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து எவ்விதமான நீதிமன்ற கட்டளையும் இன்றி தேடுதல் நடத்தி அடாத்தாக நடந்து கொண்டதாக சட்டத்தரணிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.காவல்துறையினரின் செயல்களை கண்டித்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கள்ள உறுதிக்கு தடையா! நாளை ஆர்ப்பாட்டம்!
25
previous post