உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது நோபல் பரிசு ஆகும். இலக்கியம், இயற்பியல், மருத்துவம், வேதியியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், உலக அமைதிக்காக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டான 2025 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி என மொத்தம் 3 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த மேரி ப்ரஙகோ, அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றம் ஜப்பானைச் சேர்ந்த சைமன் ஷஹகுச்சி ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேருக்கும் புற நோய் எதிர்ப்பு சகிப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்பிற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்டுபிடிப்புகளில் நோய் எதிர்ப்பு சக்தியின் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.நோபல் பரிசு பெற்றுள்ள ஜப்பான் விஞ்ஞானி சைமன் முன் எப்போதும் அறியப்படாத நோய் எதிர்ப்பு செல்களின் ஒரு வகுப்பை கண்டுபிடித்தார். இது உடலை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஒத்துழைக்கிறது. இதை அவர் 1995ம் ஆண்டு கண்டுபிடித்தார். நோபல் பரிசு பெற்றுள்ள மேரி ப்ரங்கோ மற்றம் ஃப்ரெட் ராம்ஸ்டெல் இருவரும் 2011ம் ஆண்டு முக்கிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தனர். அதாவது, மனித மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர்களின் கண்டுபிடிப்புகள் அமைந்தது. அதற்கு அவர்கள் ஃபோக்ஸ்பி3 என்று பெயரிட்டனர். இதை இவர்கள் கண்டுபிடித்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பான் விஞ்ஞானி சைமனும் இவர்களுடன் இணைந்தார். அப்போது, 1995ம் ஆண்டில் அவர் கண்டுபிடித்த செல்களின் வளர்ச்சியை ஃபோக்ஸ்பி3 மரபணு நிர்வகிக்கிறது என்று நிரூபித்தார். இவர்களின் கண்டுபிடிப்புகள் நமது செல்கள் நோய் எதிர்ப்பு செல்களை கண்காணித்து நோய் எதிர்ப்பு செல்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஃப்ரெட் ராம்ஸ்டெல் அமெரிக்காவில் உள்ள சோனோமா பயோதெரபிடிக்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார். சைமன் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த துறையில் பேராசிரியராக உள்ளார். மேரி ப்ரங்கோ அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சியாட்டிலில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனத்தில் திட்ட மேலாளராக உள்ளார்.நோபல் பரிசுத்தொகை 9 லட்சம் அமெரிக்க டாலர் ஆகும். மருத்துவம் மட்டுமின்றி இயற்பியல், பொருளாதாரம், வேதியியல் மற்றும் அமைதிக்கான துறையிலும் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. டிசம்பர் 10ம் திகதி நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
2025 ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வென்றவர்கள்
30