இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்திய ரூபாயில் 44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, 6.58 கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Spread the love இலங்கைத் தமிழர்இலங்கைத் தமிழர் அகதி முகாம்கள்இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள்தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
இலங்கைத் தமிழர்களுக்காக, 772 புதிய வீடுகள் திறக்கப்பட்டன! – Global Tamil News
28