கடந்த 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக கடந்த 1947-48-ம் ஆண்டில்
இன்றளவும் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 1963-ம் ஆண்டில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பகுதியை சீனாவுக்கு பாகிஸ்தான் வழங்கியது. இந்தப் பகுதியை சீன அரசு, அக்சாய் சின் என்று அழைக்கிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று மத்திய அரசு உறுதியாக கூறி வருகிறது.
இந்த சூழலில் இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் நேற்று சமூக வலைதளத்தில் ஒரு வரைபடத்தை வெளியிட்டது.
அதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக அடையாளமிடப்பட்டு உள்ளன. இதன்மூலம் பாகிஸ்தான், சீனாவுக்கு அமெரிக்க அரசு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

COMMENTS