புத்தர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இருவர் கைது!

Homeசெய்திகள்

புத்தர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இருவர் கைது!

புத்தர் சிலைகளின் நெற்றியில் இருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை இன்று (08) நாவலப்பிட்டி

ஹட்டனில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்
ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் இன்று பொதுத்தேர்தல்
அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்


புத்தர் சிலைகளின் நெற்றியில் இருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலயங்களில் இருக்கும் புத்தர் சிலைகளின் நெற்றியில் காணப்படும் கலசங்களை இரண்டு சந்தேக நபர்களும் திருடியுள்ளனர்.
இறுதியாக முச்சக்கர வண்டியில் சென்று குறித்த இரண்டு பேரும் நாவலப்பிட்டியிலுள்ள கெட்டபுலாவ ஆலயத்தில் உள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடும் காட்சிகள் ஆலயத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கேமராவில் பதிவாகியதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.
கைதானவர்கள் 45-50 வயதுக்குட்பட்ட பிலிமதலாவ சேர்ந்தவர்களாவர் புத்தர் சிலைகளின் தலைகளை சேதப்படுத்தி இலங்கையில் முழுவதும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று கலச நினைவுச் சின்னங்களிலிருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உருகிய தங்கம் ஒரு தொகையையும் மீட்டுள்ளனர்.
குறிப்பாக குருநாகல் மற்றும் பிலிமதலாவ பகுதிகளில் தங்கப் பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தால் இவ் இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கம் உருக்கப்பட்டு விற்கப்பட்டது என்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றினையும் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணையின் பின்னர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

COMMENTS