காசா போர் நிறுத்தம் – ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் – ஹமாஸ் இணங்குமா? by admin September 30, 2025 written by admin September 30, 2025 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அதை ஹமாஸூம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் திட்டம் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முன்மொழிகிறது. ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக கூறப்படும் பலரது எச்சங்களையும் 72 மணி நேரத்திற்குள் விடுவிக்கப்படுமானால், இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான காசா மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது. போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஹமாஸூக்கு வெள்ளை மாளிகையின் 20-அம்ச திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீன அரசுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Related News
காசா போர் நிறுத்தம் – ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம் – ஹமாஸ் இணங்குமா? – Global Tamil News
42