கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!

Homeசெய்திகள்

கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!

களுத்துறை பிரதேசத்தில் இரண்டுமாடி கட்டிடம் ஒன்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவன் கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ள

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்
குடும்பிமலைப் பகுதியில் 3 கவச எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு
இத்தாலி மிலன் மற்றும் கோர்டினாவில் குளிர்கால ஒலிம்பிக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது


களுத்துறை பிரதேசத்தில் இரண்டுமாடி கட்டிடம் ஒன்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவன் கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யொவுன்கம, பயாகலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன், இரண்டுமாடி கட்டிடம் ஒன்றின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது சீமெந்து போமுவதற்காக கொன்கிரீட் கலவை இயந்திரத்திற்கு அருகில் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த இளைஞன்  கொன்கிரீட் கலவை இயந்திரத்துடன் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

COMMENTS