சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை : ரவிகரன் சாடல்

Homeசெய்திகள்

சுதந்திர இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை : ரவிகரன் சாடல்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் பட்சத்தில் அங்கு வாழும் மக்கள் எங்கு செல்வது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்

யப்பானில் முதல் போக்கிமொன் தீம் பூங்கா திறந்து வைப்பு
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17 தாக்கல்: சபாநாயகர் அறிவிப்பு
மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை


வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் பட்சத்தில் அங்கு வாழும் மக்கள் எங்கு செல்வது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அகிம்சை வழியில் போராடி முடியாத நிலையிலேயே மக்கள் ஆயுதம் எடுத்துப் போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தாலும் தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிவாரணேமே தேவையில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். அந்த மக்களை சுதந்திரமாக அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழிவகுத்தாலே போதுமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

COMMENTS