தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் – இடிந்து விழுந்த மந்திரிமனை முன்பாக நின்று சிறிதரன் எம்.பி உறுதி

by ilankai

வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடிந்து விழுந்த நல்லூர் மந்திரி மனையை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமனை நேற்றைய தினம் மழை காரணமாக ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது மிக கவலையான விடயம் இந்த மந்திரிமனை என்பது தமிழர்களின் வரலாற்று தொன்மையான இடம் இதனை பாதுகாத்து புணரமைத்து பாதுகாக்கப்பட வேண்டிய பல முயற்சிகள் எடுத்த போதும் ஒரு சில தனி நபர்களினால், இழுபறி நிலையிலே காணப்படுகிறது.இந்தக் கட்டடத்தை புனரமைத்து, இந்த தொல்பொருள் அடையாளத்தை எங்களுடைய பூர்வீகஅடையாளமாக நிலை நிறுத்துவதற்குரிய மிக முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கின்றது எனவே இந்த மந்திரி மனையை பாதுகாப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

Related Posts