3
கெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பொம்மை வெளிப் பகுதியில் காவற்துறை புலனாய்வு பிவினருக்கு கிடைத்த தகவலிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 15 போதை மாத்திரைகளுடனும் 50 மில்லிக்கிராம் கெரோயினுடனும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட மூவரும் 18,19 மற்றும் 21வயதுடையவர்கள் எனவும், மூவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.