கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்தவர்கள் இன்று , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்தவர்கள் இன்று , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றனர்.

by ilankai

கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்து வந்த அநுர குமார, ஜனாதிபதி ஆன பின்னர் , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றார். ஜனாதிபதியாக கடமையேற்று 24ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் , மக்களுக்காக  எதனையும் செய்யவில்லை என புதிய ஜனநாயக மார்க்சிய லெனின் கட்சியின்சி கா செந்தில்வேல் தெரிவித்துள்ளார்யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள புதிய ஜனநாயக மார்க்சிய லெனின் கட்சியின் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் பதவியேற்று எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் ஒரு வருடங்கள் பூர்த்தியாகின்றது. ஆனால் இந்த அரசாங்கம் எதையும் சாதிக்கவில்லை. கடந்த கால அரசாங்கங்களை விமர்சித்து ஆட்சிக்கு வந்த அனுரா அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்து வந்த அனுரா தற்பொழுது நரேந்திர மோடியுடன் கைக்குழாவி இந்தியாவுக்கு சென்று வந்துள்ளார். அவர் இந்தியாவின் நலன்களுக்காகவே செயல்படுகின்றனர். தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நம்பி இந்த அரசாங்கம் ஓடுகின்றது. இறக்குமதி பொருளாதாரத்தை இந்த அரசாங்கம் நம்பியுள்ளதுடன் இந்த நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறக்குமதி பொருளாதாரத்தையே நம்பியுள்ளது என தெரிவித்தார். 

Related Posts