லசந்த விக்ரமசேகரவுக்கு பிடியாணை! – Global Tamil News

by ilankai

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் நேற்று  (12.09.25) விசாரணைக்கு வந்த போது, லசந்த விக்ரமசேகர நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் லசந்த விக்ரமசேகரவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts