படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்

by ilankai

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது. யாழ் . ஊடக அமைய தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் சக ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் சனிக்கிழமை காலை , யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , அதனை சூழவுள்ள பகுதிகளில் விசாரணை அறிக்கை விநியோகிக்கப்பட்டது கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை , நிமலராஜன் வீட்டினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் , வீட்டினுள் கைக்குண்டு வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ,  அவரது தந்தை தாய் , மற்றும் மருமகன் ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். நிமலராஜன் படுகொலைக்கு கடந்த இருபத்தைந்து, ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக தொடர்ந்தும் யாழ் . ஊடக அமையம் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Related Posts