பத்மேவுடன் தொடர்பை பேணிய காவற்துறை உத்தியோகத்தர் கைது! – Global Tamil News

by ilankai

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை  ஊடகப் பேச்சாளர் உதவி காவற்துறை  அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். குறித்த உப காவற்துறை பரிசோதகர் கம்பஹா பிரிவின் குற்ற விசாரணை பிரிவில் பணியாற்றியவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட குற்றக் கும்பலின் ஐந்து உறுப்பினர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றது. இந்த விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts