18
ஈரானும் ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை மீண்டும் ஆய்வு செய்வதற்கான வழிகள் உட்பட, ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவதற்கு வழி வகுக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோசி இடையே கெய்ரோவில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்தச் சந்திப்பை எகிப்தின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலட்டி மத்தியஸ்தம் செய்தார்.ஜூன் மாதத்தில் இஸ்ரேல் பின்னர் அமெரிக்கா ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதிலிருந்து பெரும்பாலும் இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டது.