கொழும்பில் இரு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05.09.25) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 26 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. ரிவோல்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதே வேளை, மருதானை காவற்துறை பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்பாக இன்று (06.09.25) அதிகாலை நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் மரணம்! – Global Tamil News
16