மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை! – Global Tamil News

by ilankai

மன்னார் பிரதேசத்தில் 2023 ஆண்டு காலப்பகுதியில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு வழக்கு விசாரணையின் பின்னர் நேற்றைய தினம் (4) ஆயுள் தண்டனை வழங்கி மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .   மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி   தலைமையில் குறித்த வழக்கு நேற்றைய தினம்  வியாழக்கிழமை(4) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குற்றத்தின் பாரதூர தன்மையை கருத்தில் கொண்டு சந்தேக நபருக்கு எதிராக குறித்த  தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிரி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி யூ. ஆர்.டி சில்வா , சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஆகியோர்  ஆஜராகி இருந்தனர்.வழக்கு  தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன்   ஆஜராகி இருந்தார். வழக்கு   தொடுனர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப் பட்டதன் அடிப்படையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது..

Related Posts