2025ல், 17  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்! – Global Tamil News

by ilankai

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 பாதாள உலக நபர்கள் உட்பட 17  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக காவற்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். இலங்கை காவற்துறையின்  159ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் ரி 56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உட்பட 1,612 சட்டவிரோத ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக காவற்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறினார் Spread the love 

Related Posts