ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் மாநாடும் ஒத்திவைப்பு! – Global Tamil News

by ilankai

ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த இந்த நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (02.09.25) கூடிய கட்சியின் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த மாத இறுதியில் நிகழ்வு மீண்டும் திட்டமிடப்படும் எனவும்  ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் கட்சி குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts