முன்னாள் போராளி அரவிந்தன் விடுதலை!

by ilankai

வவுனியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைதாகி ஒன்றரை வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அரவிந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். மக்கள் பேரவை மற்றும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு, போராளிகள் நலன்புரிச்சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் அரவிந்தன் விடுதலைக்காக பாடுபட்டிருந்தன.சமூக ஊடகங்களில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களை பாராட்டி கருத்துக்களை வெளியிட்டதான வழக்கில் பிணை கிடைத்திருந்த நிலையில் புதிதாக மூன்று வழக்குகள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் முன்னைய ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் கைதாகியிருந்த முன்னாள் போராளி அரவிந்தன் விடுதலைக்காக பலதரப்புக்களும் குரல் எழுப்பிவந்திருந்தன.எனினும் முன்னைய ரணில் அரசும் பின்னராக ஆட்சியை கைப்பற்றியிருந்த அனுர அரசும் விடுதலை தொடர்பில் இழுத்தடிப்புக்களையே முன்னெடுத்திருந்தன.இந்நிலையில் 18மாத கால சிறை வாழ்க்கையின் பின்னராக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் கைதாகி முன்னாள் போராளி அரவிந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார்.இதனிடையே மேலும் 10 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts