மருதனார்மடத்தில் கையெழுத்து சேகரிப்பு!

by ilankai

மருதனார்மடத்தில் கையெழுத்து சேகரிப்பு! தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று காலை 10.00 மணிக்கு  மருதனார்மடத்தில் முன்னெடுக்கப்பட்டது, வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலைமையில் மருதனார்மடம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றதுஇக் கையெழுத்து போராட்டத்தில்  பிரதேச வாழ் மக்களின்  பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர். சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts