சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 பேருக்கு மேல் பலி! – Global Tamil News

by ilankai

மேற்கு சூடானில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று (2.09.25) உயிரிழப்பு விபரங்கள் உத்தியோகப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் உதவி கோரப்பட்டுள்ளன.

Related Posts