Home வவுனியா வவுனியாவில் மினி சூறாவளி?

வவுனியாவில் மினி சூறாவளி?

by ilankai

வவுனியாவில் இன்று வீசிய சூறாவளிக்காற்றால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இன்று  காலை ஏழு மணியளவில்  மினி சூறாவளிக் காற்று வீசியதுடன், மழையும் பொழிந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்தடையும் ஏற்ப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரப் பகுதியில் இருந்த நடைபாதை விற்பனை நிலையங்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. குறிப்பாக மின் வடங்களுக்கு மேல் மரங்கள் வீழ்ந்தமையால் சில பகுதிகளில் மின்சார தடங்கல் ஏற்ப்பட்டது.

தாழ் நிலப் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Articles