6
பிரதமரின் தேர்தல் விதிமீறல்; சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கில்லையாம்
தேர்தல் விதிமுறைகளை மீறி லாவகமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறித்து தங்களால் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்,
இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காவல்துறை திணைக்களத்துக்கும் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குமே இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.