24
யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், செயல் திறன் அரங்க இயக்கம் இணைந்து நடாத்திய குழந்தை ம.சண்முகலிங்கம் நினைவு பன்னாட்டு பண்பாட்டு ஆய்வு மாநாடும் நாடக ஆற்றுகைகளும், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது.நிகழ்வில், தமிழ் அரங்கு மற்றும் கலைகளின் சமகால வெளிப்பாடுகள் என்ற தொனிப்பொருளில் மாநாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாடக ஆற்றுகைகளும் நடைபெற்றன. ஈழத்து நவீன தமிழ் நாடகப்புலத்தில் பேராளுமையாகத் திகழ்ந்த குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் இந்த நிகழ்வு நாடகர்கள், நாடகச் செயற்பாட்டாளர்கள், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்வாக அமைந்திருந்தது.