Home கிளிநொச்சி குறிஞ்சா தீவு உப்புளத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு

குறிஞ்சா தீவு உப்புளத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு

by ilankai

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

ஆனையிறவு  உப்பளத்துக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விஜயம் செய்த இளங்குமரன் உப்பளத்தின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார் 

மேலும் தெரிவிக்கையில், 

ரஜ லுனு  என்ற பெயர் முன்னர் இருந்த அரசாங்கத்தினால் மன்னர் உப்பளத்தின் பெயரையே சூட்டப்பட்டிருந்தது அந்த பெயர் தற்போது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது 

பல  கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்ட அவர்களுக்கான நியாயம்  வழங்கப்படும்.

அதேவேளை நாட்டின் சகல பகுதிகளுக்கும் உப்பினை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன், குறிஞ்சா தீவு உப்புளத்தை அபிவிருத்தி  செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles