Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஈழத்து ரெமோ:தூள் பறக்கும் காட்சிகள்!
சூழலுக்கு ஏற்ப மதமும் அரிதாரம் பூசி வேடம் கட்டுவதில் தமிழ சிவாஜிகணேசனை ஒரங்கட்டுபவர் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராசா.இந்து ஆலயமெனில் அவர் தேனுருக பாடும் தேவாரம் கேட்போர் கண்களை நனைத்துவிடும்.
ஏற்கனவே பதவியை தக்க வைக்க கோத்தபாயவை குளிர்விக்க அவர் பலாலியில் இராணுவ தளபதிக்கு பொன்னாடை போர்த்தி காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற கதையை பதிவே முதலில் அம்பலப்படுத்தியிருந்தது.
தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தன்சலவிற்காக பௌத்தராக அவர் மாறிய அந்நியன் ரெமோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் தூள்பறத்திக்கொண்டிருக்கின்றன.