முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் ஒரு சிரட்டை கஞ்சி என்பது வெறும் சடங்கு அல்ல. அது சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக எம் இனம் முன்னெடுக்கின்ற அமைதிவழிப் போராட்டம்.
மக்கள் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் கைகளில் சிக்குண்டு எவ்வகையான அழிவுகளுக்கு முகங்கொடுத்தார்கள், அவ் அழிவினையே தங்கள் போராட்டத்தின் அடையாளமாக மாற்றிக்கொண்டார்கள் என்பதற்கான அடையாளமாக சிரட்டைக் கஞ்சி உருவகம் பெற்றுள்ளது.
15 வருடங்கள் கடந்தும், இலங்கை அரசாங்கங்களினால் ஏற்றுக்கொள்ளப்படாத, எம் மக்களின் நெஞ்சங்களில் மட்டுமே வாழ்ந்துவருகின்ற எமது இனத்துக்கான நீதிக்கான போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி.
இந்நிலையில் தாயகம் எங்கும் கஞ்சி வார்க்கப்பட்டுவருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் தன்சல் ஓசிச் சோற்றுக்கு அலைந்த யாழ் மாவட்டச் செயலர் பிரதீபனும் அவரது குழுவும் தொடர்பில் நையாண்டிகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே வவுனியாவில் தன்சல என சிங்கள விசுவாசத்தை ஒரு கும்பல் காண்பித்துவருகையில் தளராது யாழிலும் யாழ் மாவட்டச் செயலர் பிரதீபனும் அவரது குழுவும் காவடியெடுத்துள்ளனர்.