Home யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய யாழ்.பல்கலை மாணவர்கள்

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய யாழ்.பல்கலை மாணவர்கள்

by ilankai

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் உள்ள ஆலடி பகுதியில் இன்றைய தினம் கஞ்சி வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்களால் அப்பகுதி மக்களிடம் அரிசி சேகரிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு சிரட்டைகளில் பொதுமக்களுக்கும் வீதியில் சென்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார காலப்பகுதியை தமிழ் மக்கள் துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும்.  

கேளிக்கை ரீதியான நிகழ்வுகளையோ நினைவுகூறலை அவமதிக்கும் வகையான செயற்பாடுகளை இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் தவித்துக் கொள்ள வேண்டும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.

அதேவேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து எதிர்வரும் மே 18ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Articles