Home Uncategorized இலங்கையில் 100 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து.. 21 பேர் பலியான பரிதாபம்!

இலங்கையில் 100 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து.. 21 பேர் பலியான பரிதாபம்!

by ilankai

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 11 May 2025, 3:02 pm

இலங்கையில் பயணிகள் பேருந்து ஒன்று பாறையிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். (புகைப்படங்கள்- Samayam Tamil)
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய இலங்கையின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள கோட்மலே நகருக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தெற்கு யாத்திரைத் தலமான கதிர்காமத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு 75 பயணிகளுடன் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்து சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் பேருந்து சென்ற போது பாறையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் கவிழ்ந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதியில் பேருந்து ஓட்டுநர் இடதுபுறம் திரும்ப முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இலங்கையில் சமீப நாட்களாக பேருந்து விபத்துகள் அதிகரித்துள்ளன. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகள் காரணமாக இந்த கொடூர விபத்துகள் நிகழ்வதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான பேருந்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் 100 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து நொங்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்து போயுள்ளது.

ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles