33
கட்டியணைத்தவாறு புதைகுழியில்? தூயவன் Friday, August 29, 2025 யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுஅதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 44 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதியுடன் 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. Related Posts யாழ்ப்பாணம் NextYou are viewing Most Recent Post Post a Comment