Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிட்ட நமக்கு மக்கள் பெரும் ஆதரவை தந்துள்ளார்கள். இனிவரும் தேர்தல்களில் நாம் புத்தெழுச்சியுடன் போட்டியிடுவோம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபை தேர்தலில் நாம் தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக மான் சின்னத்தில் போட்டியிடுவதற்காக யாழ் . மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோம். அவற்றில் சிலது நிராகரிக்கப்பட்ட நிலையில் 07 சபைகளில் போட்டியிட்டோம்.
விதியோ சதியோ தெரியவில்லை எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையால் , நாம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டோம். அந்த முயற்சியும் தோல்வியடைந்தமையால் , நாம் தேர்தல் பிரச்சார பணிகளுக்காக வெறும் 11 நாட்களே செலவு செய்தோம்.
குறுகிய கால பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும் சிறப்பான அடைவுகளை பெற்றுள்ளோம்.
நல்லூர் பிரதேச சபையில் 06 ஆசனங்களும் , காரைநகர் பிரதேச சபையில் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளோம். அங்கு தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய நிலைமை காணப்பபடுகிறது.
அவ்வாறு ஆட்சி அமைப்போம் ஆயின் , அப்பிரதேச சபைகளை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்வோம் என மேலும் தெரிவித்தார்.