உக்ரைன் தொடர்ச்சியாக இரண்டாவது இரவும் மொஸ்கோ மீது இரவு நேர ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா கூறுகிறது.
வான் பாதுகாப்பு பிரிவுகள் 105 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றிரவு தாக்குதல்களுக்குப் பின்னர் மொஸ்கோவின் நான்கு விமான நிலையங்களும் பல மணி நேரம் மூடப்பட்டிருந்தன. ஆனால் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், உக்ரைனின் கார்கிவ் மற்றும் ஒடேசா நகரங்களில் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டு உக்ரைனால் கைப்பற்றப்பட்ட ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் சண்டை தொடர்கிறது.
கடந்த வாரம், ரஷ்ய இராணுவம் குர்ஸ்க் நகரின் முழு கட்டுப்பாட்டையும் மீண்டும் கைப்பற்றியதாகக் கூறியது. ஆனால் உக்ரைன் இதை மறுக்கிறது அப்பகுதியில் இன்னும் இராணுவ இருப்பு இருப்பதாகக் கூறுகிறது.