4
படகில் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் வந்தவர் கைது
தமிழகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் , படகு மூலம் தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு சென்று தஞ்சமடைந்த நபர் , மீண்டும் இலங்கைக்குள் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் நுழைந்துள்ளார்.
குறித்த நபர் படகில் நெடுந்தீவு கடற்பகுதியை அண்மித்த போது ,கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.