2
சிலை வைப்பு:தெரியாதென்கிறார் சந்திரசேகரன்
தேசிய தலைவருக்கு சிலை வைப்போம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய உறுப்பினர்கள் பகிர்ந்த பாடல் பற்றி ஊடகவியாளர்கள் கேள்வியெழுப்பியபோது இதுபற்றி எனக்கு ஏதும் தெரியாது. அதனை நான் கேட்கவில்லை. நாங்கள் அதனை வெளியிடவில்லை. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் சிலை வைக்கப்போவதில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதனிடையே ஊடக சந்திப்பிற்கு இடையிலே பாடல் ஊடகவியலாளர்களால் அமைச்சருக்கு காண்பிக்கப்பட்டது.