Home கொழும்பு பிள்ளையான் தெற்கில் கதாநாயகனாம்?

பிள்ளையான் தெற்கில் கதாநாயகனாம்?

by ilankai

பிள்ளையான் போன்றவர்களை கைது செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் தேசிய மக்கள் சக்தி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட முக்கிய சூத்திரதாரிகளான தென்னிலங்கை முக்கிய சூத்திரதாரிகளை காப்பாற்ற முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

முன்னதாக எப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பின்னாலிருந்த சூத்திரதாரிகளை அம்பலப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அனுர தெரிவித்திருந்தார்.எனினும் அவ்வாறாக எவருடைய பெயர்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இதனிடையே பிள்ளையான் போன்ற நபர்கள் தற்போது தேசிய ஹீரோக்களாக உயர்த்தப்படுகிறார்கள். எதிர்க்கட்சி இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அதற்கு 6ஆம் திகதி பாடம் கற்பிக்கப்படுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில், பாரம்பரியக் கட்சிகளால் மக்கள் ஏற்கனவே நிராகரித்த ஊழல் நிறைந்த, வீணான அரசியல் கலாச்சாரத்தைப் பாதுகாக்க முடியவில்லை. அதன் விளைவாக, பலர் இப்போது தேர்தல் களத்தில் சுயாதீனக் குழுக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், அதே பழைய முகங்கள்தான் என்றும் இலங்கை பிரதமர்; தெரிவித்துள்ளார்.

Related Articles