11
வல்வெட்டித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடியவாறு சூழலை வைத்திருந்த குடியிருப்பாளர்களுக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்கள் குடியிருப்புகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் கள தரிசிப்புக்களுக்கு சென்ற வேளை டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய மூன்று குடியிருப்பாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை மூன்று குடியிருப்பாளர்களுக்கும் தலா 7 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.